Chapter 1: Using PHP

1.PHP INSTALLATION

PHP ஒரு Open Source ஆகும். இந்த சாப்ட்வேர் https://www.wampserver.com/en/ என்கின்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். உங்களுடைய OS ஆனது WINDOWS 7 OR 10 ஆக இருக்க வேண்டும். இந்த சாப்ட்வேர் 64 BITS மற்றும் 32 BITS கிடைக்கும்.

இந்த சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்யும் முன் அந்த இணையதளத்தில் changelog என்கின்ற ஆப்சன் உண்டு. அதன் மூலம் இந்த சாப்ட்வேர்க்கு தேவையான சப்போர்ட் சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்துகொள்ள உதவும்... உதாணமாக... redistributable packages VC9, VC10, VC11, VC13, VC14 and VC15 ஆகியவை நம் விண்டோஸில் இன்ஸ்டால் ஆகிருக்க வேண்டும். அதன் பின் 64 or 32 wampserver -ஐ d:\wamp ல் install செய்துகொள்ளவும்.

2.PHP ACCESSING

நாம் Save செய்யப்படும் அனைத்து .php file களும் d:\wamp\www\ என்கின்ற folder களில் சேமித்துவைக்க வேண்டும். DESKTOP ல் உள்ள INSTALL செய்யப்பட WAMPSERVER shortcut ICON -ஐ OPEN செய்வதன் மூலம் SYSTEM TRAY ICON ல் காணலாம்.

அதன் மூலம் Localhost தேர்வுசெய்து localhost பக்கத்தினை browser மூலம் காணலாம் அலல்து browser ல் localhost என address bar ல் கொடுத்தும் பெறலாம். நாம் சேகரித்து வைத்துள்ள php FILES AND FOLDERSகளை இங்கு பார்க்க முடியும்.

4.EMBEDDING PHP

<?php என்ற TAG ஆரம்பமாகவும் ?> என்ற TAG முடிவாகவும் இருக்கும். இதற்குள் PHP CODING எழுதப்படும்.

<!doctype html> 
<html>
<head>
<meta charset="UTF-8">
<title>PHP Test</title>
</head>
<body>
<?php ?>
</body>
</html>

5.Outputting Text

PHP மூலம் TEXT நமக்கு காட்டுவதற்கு echo or print என்கின்ற command மூலம் காட்டப்படும். Double Quotes ற்குள் text செய்து அதன் முடிவில் (;) semicolon கொடுத்து அந்த statement-ஐ முடித்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் அனைத்து PHP FILE களும் echo COMMAND மூலமாகத்தான் எழுதப்படும்.

<!doctype html> 
<html>
<head>
<meta charset="UTF-8">
<title>PHP Test</title>
</head>
<body>
<?php echo "This is a PHP Tutorial In Tamil"; ?>
</body>
</html>
Output
This is a PHP Tutorial In Tamil

இந்த php file ஐ chapter1.php என d:\wamp\www\phptutamil\ என்கின்ற URL ல் சேமித்து வைக்க வேண்டும். BROWSER address bar ல் localhost என டைப் செய்து அதன் மூலம் நாம் உருவாக்கிய phptamil/chapter1.php ஐ RUN செய்து PHP -ஐ HTML வடிவில் பெறலாம் அல்லது localhost/phptamil/chapter1.php

6.Comments

COMMENT என்பது நாம் எழுதும் PHP CODING -ஐ தற்காலிகமாக EXECUTE ஆகாமல் இருப்பதற்காக பயன்படுகிறது. இவை இரண்டு வகை உண்டு.

// single-line comment
/* multi-line comment */

<!doctype html> 
<html>
<head>
<meta charset="UTF-8">
<title>PHP Test</title>
</head>
<body>
<h3>PHP Comments</h3>
<?php

// echo "This is PHP Tutorial In Tamil";

/*
echo "This is PHP Tutorial In Tamil";
echo "Chapter 1";
*/


?>
</body>
</html>
Output

PHP Comments