echo மூலம் ஒரு Variable-ல் உள்ள Data-வை காண்பிக்கும் முன் அந்த Variable ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை கண்டறியவேண்டும். அப்படி கண்டறிய சில வழிமுறைகள் உள்ளன அவைகளை built-in construct என அழைக்கப்படுகிறது.
ஒரு Variable ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிய isset construct பயன்படுத்தப்படுகிறது. ஒரு Variable ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருந்தால் இதன் return value TRUE ஆகும் ஒருவேளை அது பயன்படுத்தப் படாமலும், define செய்யப்படாமலும் அல்லது அவை NULL value-ஐ கொண்டிருந்தாலும் இதன் return value FALSE ஆகும்.
<?php
if(isset($a)){// Return Value is FALSE
}
$a = 10;
if(isset($a)){ // Return Value is TRUE
}
$a = NULL;
if(isset($a){ // Return Value is FALSE
}
?>
ஒரு Variable ஏற்கனவே பயன்படுத்தாமல் இருக்கிறதா அல்லது அந்த Variable ஒரு NULL அல்லது FALSE-ஐ கொண்டிருக்கினவா என்பதை கண்டறிய empty construct பயன்படுத்தப்படுகிறது. உண்மை என்றால் இதன் return value TRUE ஆகும் இல்லாவிடில் FALSE தரும்.
<?php
if(empty($b)){// Return Value is TRUE
}
function xyz(){
$c = 10;
}
xyz();
if(empty($c)){ // Return Value is TRUE
}
?>
ஒரு Variable ஆனது NULL-ஐ கொண்டுள்ளனவா என தெரிந்துகொள்ள is_null பயன்படுத்தப்படுகிறது.
<?php
$a = 10;
if(is_null($a)){// Return Value is FALSE
}
$a = NULL;
if(is_null($a){ // Return Value is TRUE
}
?>
ஒருவேளை ஒரு Variable ஏற்கனவே பயன்படுத்தாமல் இருந்து is_null வைத்து தெரிந்துகொள்ள முற்ப்பட்டால் அதன் Return Value TRUE ஆகும். ஆனால் Notice: Undefined variable: என்ற Error Warning Message கொடுக்கும். is_null பதிலாக ( === ) மூன்று சமக்குறிகளை வைத்தும் அவை தெரிந்துகொள்ளலாம்
உருவாக்கிய Variable-ஐ அதன் பயன்பாடு முடிந்தபின் அதை நிரந்தரமாக நீக்க unset உபயோகிக்கப்படுகிறது.
<?php
$a = 10;
echo $a;
unset($a);
?>
எதனால் ஒரு Variable-ஐ delete செய்ய வேண்டும்? Variables அனைத்தும் memory-களில் பாதுகாக்கப்படும். அதன் அளவு அதிகமானால் ஒரு webpage loading time அதிகமாகும். இதனால் நாம் பயன்படுத்து முடித்த Variable-ஐ unset செய்வதன் மூலம் memory வேகத்தை அதிகப்படுத்தலாம். ஒரு php page 3000 lines க்கு மேல் எழுதப்படும் போது இதை பயன்படுத்தலாம். மற்றபடி ஒரு webpage load ஆகியதும் அதன் அனைத்து Variable-களும் தானாக delete ஆகிவிடும்.
| is_array() | True if variable is an array. |
|---|---|
| is_bool() | True if variable is a bool. |
| is_callable() | True if variable can be called as a function. |
| is_float(), is_double(), is_real() | True if variable is a float. |
| is_int(), is_integer(), is_long() | True if variable is an integer. |
| is_null() | True if variable is set to null. |
| is_numeric() | True if variable is a number or numeric string. |
| is_scalar() | True if variable is an int, float, string, or bool. |
| is_object() | True if variable is an object. |
| is_resource() | True if variable is a resource. |
| is_string() | True if variable is a string. |
<?php
is_numeric(10.5); // true (float)
is_numeric('33'); // true (numeric string)
is_numeric('php'); // false (non-numeric string)
?>