Important String Functions In PHP

In build function என்று கூறலாம். இந்த function ஏற்கனவே php ல் எழுதப்பட்டிருக்கும். அவற்றை தகுந்த இடத்தில் பயன்படுத்தினால் அதற்க்கான விடை கிடைக்கும்.

addslashes()

MYSQL Query மூலம் database க்கு value க்களை அனுப்ப addslashes() பயன்படுகிறது. பெரும்பாலும் special charactors களை பதிவு செய்யும்போது பயன்படுத்தப்படும்.

<?php 
 $result = mysqli_query($connection, "INSERT INTO customer(email_id) VALUES('".addslashes($_SESSION['email_id'])."')");
 ?>

explode()

கொடுக்கப்படும் string ஐ seperator மூலம் பிரித்து அவைகளை ஒவ்வொன்றாக array ல் சேகரிக்கப்படும். ஒரு string களில் comma(,) வரை பிரிக்க வேண்டும் எனில் seperator ல் comma குறிப்பிடுவதன் மூலம் அந்த string ஐ பிரிக்கலாம்.

Syntax
explode(separator,string,limit)
<?php 
    $exp = explode(" ",learning PHP in Tamil);
    print_r($exp);
    echo "<br>";
    
    for($i=0;$i<count($exp);$i++){
        if($i==1){
            echo $exp[1];
            break;	
        }
   }
    
 ?>
Output

 Array ( [0] => learning [1] => PHP [2] => in [3] => Tamil ) 
 PHP
 
Using Limit In Explode Function
<?php 
    $exp = explode(" ",learning PHP in Tamil,2);
    print_r($exp); 
 ?>
Output

 Array ( [0] => learning [1] => PHP in Tamil ) 
 

மொத்தம் இரண்டு array மட்டுமே பிரிக்க வேண்டும். முதல் space ல் எடுக்கப்பட்ட value ஐ முதல் array க்கும் மற்றவை இரண்டாவது array க்கு கொண்டு செல்ல வேண்டும்.

Negative Limit In Explode Function

Limit ல் கொடுக்கப்படும் எண் negative ல் கொடுக்கப்படும் பொது , explode ல் பெறப்படும் array ல் கடைசி இரண்டு array value க்களை நீக்கிவிடும்.

<?php 
    $exp = explode(" ",learning PHP in Tamil,-2);
    print_r($exp); 
 ?>
Output

 Array ( [0] => learning [1] => PHP )
 

implode()

பெறப்படும் array value க்களை string ஆக convert செய்து தரும். ஒரு வாக்கியத்தை explode() மூலம் எப்படி array வாக மாற்றினோமோ அதேபோல் implode() மூலம் array value க்களை string ஆக மாற்றி பெறலாம்.

Syntax
implode(separator,array)
<?php 
  $exp = array("learning","PHP","in","Tamil")
  echo implode(" ",$exp);
  echo "<br>";
  echo implode("-",$exp);
?>
Output

 learning PHP in Tamil
 learning-PHP-in-Tamil 
 

lcfirst()

Lower Case First என்பதன் சுருக்கம். String ன் முதல் எழுத்து lower case ஆக மாற்றி தருவதற்கு lcfirst() function பயன்படுத்தப்படுகிறது.

<?php 
  echo lcfirst("PHP Lcfirst Function In Tamil");
?>
Output

 pHP in Tamil
 

ucfirst()

Upper Case First என்பதன் சுருக்கம். String ன் முதல் எழுத்து upper case ஆக மாற்றி தருவதற்கு ucfirst() function பயன்படுத்தப்படுகிறது.

<?php 
  echo ucfirst("php Ucfirst Function In Tamil");
?>
Output

 Php Ucfirst Function In Tamil
 

trim()

கொடுக்கப்படும் String ல் ஆரம்பத்திலும் முடிவிலும் உள்ள whitespace களை நீக்க Trim function பயன்படுத்தப்படுகிறது. இடையில் உள்ள whitespace களை நீக்காது. இவை whitespace மட்டுமல்ல முதலில் அல்லது முடிவில் உள்ள எழுத்துக்களையும் நீக்கும்.

Syntax
trim(string)
trim(string, charlist)

Charlist ஒரு case sensitivity. Upper case ஒரு string ல் இருந்தால் upper case கொண்டு தான் நீக்க முடியும்.

<?php 
echo trim(" Trim Function In PHP ")."<br>";

 //Trim Function In PHP

echo trim("Trim Function In PHP", "P")."<br>";

 //Trim Function In PH

echo trim("Trim Function In PHP", "TP")."<br>";

 //rim Function In PH
 
echo trim("Trim Function In PHP", "TrP")."<br>";

//im Function In PH

echo trim("Trim Function In PHP", "TrHP")."<br>";

//im Function In

echo trim("Trim Function In PHP", "PTr")."<br>";

//im Function In PH

?>

ltrim()

கொடுக்கப்படும் string ல் ஆரம்பத்தில் உள்ள whitespace அல்லது எழுத்துக்களை நீக்க ltrim() function பயன்படுத்தப்படுகிறது.

<?php 
echo trim(" Ltrim Function In PHP ")."<br>";

 //Lrim Function In PHP

echo trim("Ltrim Function In PHP", "T")."<br>";

 //rim Function In PHP

echo trim("Ltrim Function In PHP", "trim")."<br>";

 //Ltrim Function In PHP
 
echo trim("Ltrim Function In PHP", "TRIM")."<br>";

//rim Function In PHP

echo trim("Ltrim Function In PHP", "STUVWXYZ")."<br>";

//rim Function In PHP

?>

rtirm()

ltrim எப்படி இடது பக்கத்திலிருந்து ஆரம்பித்து எழுத்துக்களை நீக்க பயன்படுகிறதோ அதேபோல rtrim() function ஆனது வலது பக்கத்திலிருந்து ஆரம்பித்து எழுத்துக்களையோ அல்லது whitespace களை நீக்க பயன்படுகிறது.

<?php 
echo trim(" Rtrim Function In PHP ")."<br>";

 // Lrim Function In PHP

echo trim("Rtrim Function In PHP", "PH")."<br>";
//rim Function In 
?>

str_repeat()

ஒரு string value ஐ எண்ணற்ற முறையில் காண்பிக்கலாம்.

<?php
echo str_repeat("Learn PHP ",2);
//Learn PHP Learn PHP 
?>

str_replace()

தேடப்படும் string value ஐ பிறிதொரு string value ஆக மாற்றுதல்.

str_replace("தேடப்படும் string","மாற்றவேண்டிய string","கொடுக்கப்பட்ட string")
<?php
echo str_replace("String Replace","str_replace","PHP String Replace Function");
//PHP str_replace Function
?>

str_shuffle()

அனைத்து எழுத்துக்களையும் குலுக்கல் செய்து தரும். ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தை str_shuffle() function மூலம் எழுத்துக்களை இடமாற்றம் செய்யலாம். இந்த str_shuffle function பொதுவாக password உருவாக்க பயன்படுத்தப்படும். ஒவ்வொருமுறையும் இந்த str_shuffle() function execute ஆகும்பொழுது வெவ்வேறு ரிசல்ட் கொடுக்கும்.

<?php
$a_u = "ABCD";
$a_l = "wxyz";
$s_c = "*%$#";
$n = "4567";
echo str_shuffle($a_u.$a_l.$s_c.$n);
?>
Output

 $*y45wDz%AC6#Bx7
 

split()

ஒரு string ஐ array வாக மாற்றி தரும். அது ஒவ்வொரு எழுத்துக்களாகவோ அல்லது string ஐ ஒன்றுக்கு மேற்ப்பட்ட பிரிவாகவோ பிரித்து array ல் வைக்கலாம்.

<?php
print_r(str_split("PHP"));
?>
Output

 Array ( [0] => P [1] => H [2] => P )
 

கொடுக்கப்படும் string களை ஐந்து ஐந்து எழுத்துக்களாக ஒரு array ல் சேகரிக்கலாம். Whitespace ம் ஒரு எழுத்தாக கணக்கில் கொள்ளப்படும்.

Syntax
str_split(string,length)
<?php
print_r(str_split("PHP Split Function",5));
?>
Output

Array ( [0] => PHP S [1] => plit [2] => Funct [3] => ion )
 

str_word_count()

ஒரு வாக்கியத்தில் எத்தனை வார்த்தைகள் உள்ளன என்பதை எண்ணிக்கையாக தரும்.

<?php
 echo str_word_count("PHP str_word_count() Function");
 ?>

str_word_count function ஆனது special charactor களை கணக்கில் எடுத்துக்கொள்ளாது. special charactor களைம் எண்ணிக்கையில் கொள்ளவேண்டுமானால் இரண்டு parameter களை செலுத்த வேண்டும்.

Syntax
str_word_count(string,return,char)

முதல் parameter ல் Return value 1 கொடுப்பதன் மூலம் word counting பதிலாக ஒவ்வொரு word ம் array ல் கொடுக்கும். இரண்டாம் parameter ல் எந்த special charactor ஐ காட்ட வேண்டுமோ அவற்றை கொடுக்க வேண்டும். இரண்டாம் parameter ல் ஒன்றுக்கு மேற்பட்ட special charactor ஐ கொடுக்கலாம்.

<?php
 print_r(str_word_count("PHP str_word_count() Function",1));
//Array ( [0] => PHP [1] => str [2] => word [3] => count [4] => Function )

print_r(str_word_count("PHP str_word_count() Function",1"()"));
//Array ( [0] => PHP [1] => str [2] => word [3] => count() [4] => Function ) 
 ?>