Double quote ( " " ) அல்லது single quote ( ' ' ) உள் கொடுக்கப்படும் அனைத்தும் STRING ஆக கருதப்படும்.
<?php
echo "string values";
echo 'string 101';
?>
இரண்டு STRINGS களை இணைத்து கொடுப்பதற்கு (.) ஒரு புள்ளி பயன்படுத்தப்படும்.
<?php
$a = "PHP";
$b = "TAMIL";
echo $a.$b; // PHPTAMIL
$a .=$b; // PHPTAMIL
$a .= " ".$b; // PHP TAMIL // $a = $a." ".$b;
?>
Double quote ( " " ) ல் கொடுக்கப்படும் VARIABLE அதன் VALUE வை கொடுக்கும்.
<?php
$c = "PHP Tamil";
echo "Tutorial For $c"; // Tutorial For PHP Tamil
?>
Single quote ( ' ' ) ல் கொடுக்கப்படும் VARIABLE அதன் VALUE வை காட்டாது.
<?php
$c = "PHP Tamil";
echo 'Tutorial For $c'; // Tutorial For $c
?>
டபுள் கோட்ஸ் (") க்குள் எழுதப்படும் ஒரு வாக்கியத்தில் இன்னொரு டபுள் கோர்ட்ஸ் காட்ட அல்லது சிங்கிள் கோட்ஸ் (') க்குள் எழுதப்படும் ஒரு வாக்கியத்தில் இன்னொரு சிங்கிள் கோட்ஸ் காட்ட scape Character (\) பயன்படும்.
<?php
echo "Best Practice for \"PHP Tamil\"";
echo "<br/>";
echo 'Best Practice for \'PHP Tamil\'';
?>
ஒரு Escape Character அருகில் ஒரு Special character மட்டுமே அனுமதி. Escape Character இல்லாமல் டபுள் கோட்ஸ் (") க்குள் டபுள் கோட்ஸ் பயன்படுத்த முடியும் சிங்கிள் கோட்ஸ் (') மற்றும் String Concatenation உதவியுடன்.
<?php
echo "Best Practice for ".'"'."PHP Tamil".'"';
echo "<br/>";
echo 'Best Practice for '."'"."PHP Tamil"."'";
?>
VARIABLE ல் இருக்கும் STRING -ன் ஒவ்வொரு எழுத்துக்களும் எண் வரிசையில் அமைந்து இருக்கும். அவை 0 என்ற வரிசையிலிருந்து ஆரம்பிக்கும். அதனுடைய முதலாம் CHARACTOR ஐ நீக்கி வேறொரு CHARACTOR ஐ கொண்டுவரலாம்.
<?php
$a = "php"; // p->0; h->1; p->2
$a[0] = "t";
echo $a; // thp
$a[3] = "t";
echo $a; // thpt
?>